Thursday, November 27, 2014

பெட்ரோல் விலைக் குறைப்பின் பின்னனி - அமெரிக்காவின் சூழ்ச்சி

 சமீபத்தில் பெட்ரோல் விலை சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு 1 பேரலுக்கு 80 டாலர் என்ற அளவில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சவூதி அரேபிய மன்னரின் சந்திப்பிற்க்கு பின்னர் இந்த விலைக்குறைப்பு உறுதி செய்யப்பட்டது.இதன் பின்னனியில் பல மர்மங்கள் உள்ளன.உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் தலையீட்டை எதிர்க்கவும்,அணு ஆயுத நாடாக உருவாக முயலும் ஈரானை எதிர்க்கவும் இந்த அதிரடி விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவை எதிர்க்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்:


உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை அமெரிக்காவும்,ஐரோப்பிய யூனியனும் எடுத்து வருகின்றன.புதின் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு விசா தடை,ரஷ்யாவின் பெரும் தொழிலதிபர்களின் வங்கிக்கணக்கு முடக்கம்,ரஷ்யத் தயாரிப்புகளுக்கு தடை என பல தடைகளை விதித்துள்ளது.மேலும் உக்ரைனில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் புரட்சியாளர்களுக்கு ஆயுதம் மற்றும் பண உதவி அளிப்பதாக ரஷ்யாவைக் குற்றம் சாட்டுகின்றன.மேலும் உக்ரைனின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வராததால் உக்ரைனின் உதவியுடன் ரஷ்யாவின் எல்லையோரங்களில் அமெரிக்கா மற்றும் நோட்டோ படைகள் பீரங்கிகளையும்,இராணுவத்தையும் குவித்து வருகிறது.அத்தோடில்லாமல் ரஷ்யாவின் எல்லையோர நாடுகளான எஸ்டோனியா,லத்திவாவிலும் இராணுவத்தை குவித்து வருகின்றன.உக்ரைன் விவகாரத்திற்க்கு முன்புவரை அமெரிக்காவால் ரஷ்யாவின் அருகில் நெருங்க முடியாமல் இருந்தது.தற்போது அமெரிக்கா இராணுவ ரீதியாக ரஷ்யாவை நெருங்கிவிட்டதால் அடுத்ததாக ரஷ்யாவின் பொருளாதாரத்தை அடியோடு ஒடுக்க ஆர்வம் காட்டி வருகிறது.

ரஷ்யாவின் பொருளாதார பலமே அதன் இயற்கை வளங்களான பெட்ரோலும்,இயற்கை எரிவாயும்தான்.ரஷ்யாவின் பெட்ரோலுக்கும்,இயற்கை எரிவாயுக்கும் முற்றிலும் தடை விதிக்க முடியாது.ஏனென்றால் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவின் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பித்தான் உள்ளன.அதையும் மீறி தடைவிதித்தால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.விலைக்குறைப்பிற்க்கு  நிர்ப்பந்தப்படுத்துவதின் மூலம் ஓரளவிற்க்கு ரஷ்யாவின் பொருளாதாரத்தைக் கட்டுபடுத்தலாம்.அதன் ஒரு பகுதியாகத்தான் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் சவூதி அரேபிய மன்னரின் சந்திப்பில் இந்த விலைக்குறைப்பிற்க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.OPEC உறுப்பு நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த விலைக்குறைப்பு செய்யப்பட்டது.தற்போது 1 பேரல் கச்சா எண்ணெய் 80 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.ரஷ்யாவில் பெட்ரோலை எடுப்பதற்க்கு ஆகும் செலவு மிக அதிகம்.பெட்ரோல் விலை 100 டாலருக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே ரஷ்யாவால் ஒரளவிற்கு இலாபம் பார்க்க முடியும்.மேலும் ரஷ்யா தனது பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க 2014ல் 98 டாலருக்கும்,2015ல் 105 டாலருக்கும் பெட்ரோலை விற்றால் மட்டுமே சமாளிக்க முடியும்.பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க ரஷ்யா தனது பட்ஜெட்டில் மானியங்கள் மற்றும் நிதிச்சுமையை குறைக்க முயலும்.ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகளால் ரஷ்ய பொருளாதாரம் சரிந்துக் கொண்டே செல்கிறது மேலும் டாலருக்கு எதிரான அந்நாட்டின் நாணய மதிப்பு 30% வரை சரிந்துள்ளது.இதனால் ரஷ்யா தனது மானியங்களை குறைக்கும்பட்சத்தில் அது அந்நாட்டு மக்களை அரசுக்கு எதிராக போராடத் தூண்டும்.இதனால் ரஷ்யா உள்நாட்டு விவகாரங்களில் கவனத்தை செலுத்தும் இதன் விளைவாக தனி ஆளாக சர்வதேச விவகாரங்களில் கவனத்தை செலுத்தலாம் என்பது அமெரிக்காவின் கணக்கு.

ஈரானை எதிர்க்கும் அமெரிக்கா :


அரபு தேசத்தில் இருக்கும் ஈரானுக்கு வல்லரசு ஆசை வந்துவிட்டது.அணு ஆயுதங்களைத் தயாரிப்பதன் மூலம் தானும் இராணுவ வல்லரசாகிவிடலாம் என்று ஈரான் நினைக்கிறது.ஈரானின் பொருளாதாரம் பலமாக இருப்பதால் தனது இராணுவத்தை பலப்படுத்திவிட்டால் அரபுதேசத்தில் வலிமை வாய்ந்த நாடாக மாறிவிடலாம் என்று எண்ணுகிறது.ஒருவேளை பின்னாளில் ஈரான் அணுஆயுத வல்லரசு ஆகிவிட்டால் அரபு தேசத்தில் ஆதிக்கம் செலுத்த ஈரான் எதிர்க்கும் என அமெரிக்கா அஞ்சுகிறது.இதனால் ஈரானுக்கு சில குறிப்பிட்ட பொருளாதார தடை விதித்ததுடன் அணு ஆயுதங்களை தயாரிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும்.மேலும் ஈரானின் பொருளாதாரத்தை ஆட்டிப்பார்க்கவே இந்த பெட்ரோல் விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறாக தன்னுடைய ஒரு நகர்த்தலின் மூலம் இரு நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டிப் பார்க்கிறது அமெரிக்கா.


                                 ரஷ்யாவின் பதிலடிக்கு கிளிக் செய்யவும் 

No comments:

Post a Comment