Thursday, October 30, 2014

அமெரிக்காவின் ஆயுத தளவாடங்கள் விற்பனை தந்திரம் - பாகம் 1


இரு நாடுகளுக்கிடையில்  தத்தமது பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது பேச்சுவார்த்தையின் மூலமாகவோ அல்லது போரின் மூலமாகவோ தீர்வுகாணும்.உள்நாட்டில் ஏற்படும்போது அது புரிந்துணர்வு அல்லது பேச்சுவார்த்தையின் மூலமாகவோ அல்லது அடக்குமுறையின் மூலமாகவோ தீர்வு காணப்படும்.ஆனால் இந்த அச்சுறுத்தல்கள் சில நாடுகளால் தந்திரமாக  உருவாக்கப்பட்டு போரைத் தூண்டிவிட்டு அதில் தனது நாட்டின் ஆயுதங்களை இருநாடுகளுக்கும் பெருமளவில் விற்பனை செய்து அந்நாடுகள் பயனடைகின்றன.அத்தகைய நாடுகளில் முதன்மையானது அமெரிக்கா.

அமெரிக்காவின் ஆயுத தளவாடங்கள் உற்பத்தி ஆரம்ப காலநிலை:  


 இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில் போருக்கு தேவையான தளவாடங்கள் மிக அதிகமாக போரில் ஈடுபட்ட நாடுகளுக்கு தேவைப்பட்டது.அப்போது போர் ஆயுதங்கள் தயாரிப்பில் முன்னனியில் இருந்த அமெரிக்கா அந்த சூழ்நிலையை நன்றாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது.முதலாளித்துவ நாடான அமெரிக்கா போர் ஆயுதங்கள் தயாரிக்க அந்நாட்டின் தனியார் கம்பெனிகளுக்கு அதிக அளவில் முன்னுரிமை கொடுத்தது.ஆயுதங்கள் அதிக அளவில் தேவை என்பதால் பல புதிய கம்பெனிகள் தொடங்க அனுமதி அளித்தது.இதனால் பல புதிய கம்பெனிகள் அந்நாட்டில் தொடங்கப்பட்டன.உற்பத்தி செய்யபட்ட ஆயுதங்களை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து மிகப்பெரிய அளவில் இலாபத்தை அடைந்தது.இங்கிலாந்து அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கியே தனது பொருளாதாரத்தை மிகப் பெரிய அளவில் இழந்தது.இரண்டாம் உலகப்போரும் முடிவுக்கு வந்தது.போரினால் ஏற்பட்ட உயிரிழப்பு,பொருட்சேதம் மற்றும் கசப்பான அனுபவங்களினால் இனிமேல் போரில் ஈடுபட போவதில்லை என்று இங்கிலாந்து,பிரான்ஸ்,ஜெர்மனி,இத்தாலி ஆகியவை முடிவு செய்தன.இதனால் அந்நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்த அமெரிக்க நிறுவனங்களுக்கு இது மிகபெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதுவரை மிகப்பெரிய இலாபத்தை சந்தித்த அந்நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்தி செய்யும் இடங்களிலே தேங்க ஆரம்பித்ததுடன் நஷ்டமும் ஏற்பட ஆரம்பித்தது.இதனால் அந்நிறுவன முதலாளிகள் அமெரிக்க அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.ஏனென்றால் ஆயுத தளவாடங்கள் உற்பத்தி அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் கணிசமான பங்கு வகித்ததால் அமெரிக்க அரசு அவர்களுக்கு செவிகொடுக்க வேண்டியதாயிற்று.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்:


http://bowlingfortruth.com/wp-content/uploads/2008/04/chilecoup.jpg

இரண்டாம் உலகப்போருக்குப் பின் முதலாளித்துவ கொள்கைக்கு எதிரான கம்யூனிசம் பரவும் நாடுகளில் அதை தடுப்பதாகக் கூறிக்கொண்டு அந்நாடுகளில் உள்ள பெருமுதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு கிளர்ச்சியை உருவாக்கி கிளர்ச்சியாளர்களுக்கு தனது புலனாய்வுத் துறையின் மூலம் சிறப்பு பயிற்சியளித்து கம்யூனிசத்திற்கு எதிராக போராட தூண்டியது.இதற்கு தேவையான அனைத்து பொருள் மற்றும் ஆயுத உதவிகளை அந்நாட்டின் முதலாளிகளின் உதவியுடன் அமெரிக்கா வழங்கியது.இதற்கு பலியானவர்களில் புகழ்பெற்ற சிலி கம்யூனிஸ்ட் தலைவர் சால்வடோர் ஹோலண்டேவும் ஒருவர்.மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஒரு நாட்டின் அதிபரையே கொன்றுவிட்டு தனது புலனாய்வு துறையின் உதவியுடன் கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வர அமெரிக்கா உதவியது.நேரடியாக இப்பிரச்சினையை உற்றுநோக்கும்போது கம்யூனிசத்திற்க்கு எதிரானதாக போராட்டமாக தோற்றுவிக்கப்பட்டாலும் தனது அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தவே அமெரிக்கா கிளர்ச்சியாளர்களுக்கு உதவியது.இதன்பின்தான் அமெரிக்கா தனது சுயரூபத்தை வெளிக்காட்டத் துவங்கியது.தனது நாட்டின் தனியார் நிறுவனங்களை அந்நாட்டில் தங்குதடையற்ற வணிகம் செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது.இது ஒன்று போதுமே அந்நாட்டின் வளங்களை சுரண்டுவதற்க்கு.எந்த நாட்டில் இராணுவம் ஆட்சி செய்தாலும் எதிர்ப்பாளர்களை அடக்க அதிக அளவில் தேவைப்படுவது ஆயுத உபகரணங்கள் இங்குதான் அமெரிக்கா தனது உதவியின் முழுபலனை அறுவடை செய்கிறது.அந்நாட்டின் இராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்து பெருமளவில் இலாபம் பார்த்தது.அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்துவது,தனது நிறுவனங்களுக்கு தங்குதடையற்ற வணிகம்,ஆயுத விற்பனை என்று முப்பலனை அந்நாட்டில் அனுபவித்தது.

இஸ்ரேல்(அமெரிக்காவின் குட்டிகாலணி நாடு)

 ஆயிரம் நூற்றாண்டுகு மேலாய் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு நாடு இல்லாமல் போன இடமெல்லாம் அடித்து திருப்பி அனுப்பபட்ட ஓர் இனத்திற்க்கு தனியாக ஒரு நாடு உருவாக்கப்படுமானால் அந்த நாடு உருவாக உதவியாக இருந்த நாட்டை காலத்திற்கும் மறவாது.அவ்வாறு யூதர்களுக்கென்றே உருவான நாடுதான் இஸ்ரேல் உருவாக்கியவை பிரிட்டனும் அமெரிக்காவும்.சூயஸ் கால்வாய் பிரச்சினையில் தனது வல்லரசு அதிகாரத்தை பிரிட்டன் இழந்தபிறகு அமெரிக்கா இஸ்ரேலை தனது முழுக்கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டது.அன்றுமுதல் இன்றைய காசா தாக்குதல் வரை இஸ்ரேல் என்ன செய்தாலும் உலக நாடுகள் தட்டி கேட்பதில்லை.ஏனென்றால் அமெரிக்கா அதற்கு பின்புலமாக இருக்கிறது.இஸ்ரேல் உருவாக்கமே அப்பிராந்தியத்தில் மிகபெரிய பிரச்சினையாக இருந்தது.ஏனென்றால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பாலஸ்தீனம் நாட்டை இரண்டாக பிரித்து அங்கு யூதர்களை குடியமர்த்தி மிகச் சிறிய நாடாக உருவான இஸ்ரேல் இன்று பாலஸ்தீனத்தை முழுவதுமாய் விழுங்கிக் கொண்டிருக்கிறது.இஸ்ரேல் மூலமாக அமெரிக்கா மத்திய கிழக்கு ஆசியாவை எப்போதும் பதட்டம் நிறைந்த பகுதியாகவே காட்டிக் கொண்டிருக்கிறது.பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்தல்,எகிப்துடன் போர்,ஜோர்டானுடன் போர்,சிரியாவுடன் நில ஆக்கிரமிப்பு,காசா தாக்குதல்  என்று அண்டைநாடுகளுடன் எப்போதும் பிரச்சினை உருவாக்கிக் கொண்டே இருந்தது.இஸ்ரேல் ஒருபுறம் பிரச்சினை செய்து கொண்டிருக்க மறுபுறம் அமெரிக்க ஆயுத வியாபாரிகள் அந்த நாடுகளுக்கு போர் ஆயுதங்களை ஏற்றுமதி செய்து இன்றுவரை இலாபம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.




No comments:

Post a Comment